Subscribe Us

header ads

டோக்கியோவில் கார் பார்க்கிங் அகலத்துக்குள் அடங்கிவிட்ட 4 மாடி கண்ணாடி மாளிகை



ஜப்பானின் டோக்கியோ நகரின் தோஷிமா-கு பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி வீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் 8 அடி அகலத்தில் அமைந்துள்ள இதன் வெளிப்புறம் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தரைப்பகுதி முழுவதும் மர வேலைப்பாட்டினால் உருவாகியுள்ளது. கண்ணாடியால் ஆன சுவருடன் அமைந்துள்ள இந்த வீடு ஒரு நவீனமயமாக்கலின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

டோக்கியோவிலேயே இதுதான் மிகக்குறைந்த பரப்பளவில் அமைந்த வீடாக கருதப்படுகிறது. கார் பார்க்கிங் அகலத்துக்குள் இவ்வளவு குட்டியாக இந்த வீடு இருந்தாலும், ஒரு பொதுவான வீட்டில் அமைந்துள்ள எல்லா அம்சங்களும் இதில் நிரம்பியுள்ளது. இந்த வீட்டை உருவாக்கிய யுஆ நிறுவனத்தினர் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்புகளை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இதில், இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு, அலமாரிகளை மாடிப்படிகளுக்கு அருகேயே வைத்துள்ளனர். இதனால் அது அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றாது. இதேபோன்று, இடத்தை அடைக்காமல் இருக்கும் விதமாக விளக்குகள் சுவர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன.

இதைவிடவும் குட்டியான வீடு போலந்தின் வார்ஸா பகுதியில் வெறும் 1.22 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





Post a Comment

0 Comments