Subscribe Us

header ads

49 வருட அரசியல் அனுபவம் கொண்டவன் -ஜனாதிபதி


ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை ஒருபோதும் மீறப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
.
தெற்கு அதிவேக வீதியின் கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான வீதியை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

49 வருட அரசியல் அனுபவத்தைத் தான் கொண்டுள்ளதாகவும், திடீரென அரசியலுக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தன்னால் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்தை பாதுகாப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments