Subscribe Us

header ads

40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு


அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுப்பதற்கு 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி  மிசேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கமராக்களில் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெல் ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, புகைப்பட துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
சுற்றுலா பயணிகள் இனி வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், பிளாஷ், வீடியோ மற்றும் நேரடி ஒளிபரப்புகளுக்கு தடை நீக்கப்படவில்லை. ஓரிரண்டு சாதாரண புகைப்படங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்ள முடியும். 

Post a Comment

0 Comments