Subscribe Us

header ads

உலகம் முழுவதும் குளிர்பானங்களால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பலியாகிறார்கள்: ஆய்வில் தகவல்


மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் துணை டைரக்டர் ஜெனரல் சந்திரா பூஷண் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடு முழுவதும் உள்ள ஏராளமான குளிர்பான கம்பெனிகள் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்களை உற்பத்தி செய்கின்றன. இனிப்பு சுவை மிக்க இந்த குளிர்பானங்களை இந்தியாவில் வசதிபடைத்தவர்கள் மட்டுமல்லாது ஏழை–நடுத்தர வர்க்கத்தினரும் விரும்பி பருகுகிறார்கள்.

இந்த குளிர்பானங்களை குடிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பலர் பலியாகிறார்கள். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் குளிர்பானம் அருந்துவதால் இறக்க நேரிடுவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயால் 1 லட்சத்து 33 ஆயிரம் பேரும், இதய நோயால் 45 ஆயிரம் பேரும் தான் இறக்கிறார்கள். ஆனால் இனிப்பான குளிர்பானம் குடிப்பதால் இறப்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.

எனவே இந்த குளிர்பான நிறுவனங்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் குளிர்பானம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

குளிர்பானம் குடிப்பதால் உடல் பருமன் நோய் ஏற்படுகிறது. வயிற்றில் வாயு சம்பந்தமான நோய்களை உருவாக்குகிறது. இவற்றை விளக்கும் வகையில் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களிடையே குளிர்பானங்களால் ஏற்படும் நோய் ஆபத்து குறித்து எடுத்து கூறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments