Subscribe Us

header ads

அளுத்கம கலவரம் - 2016ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்


அளுத்கம கலவரத்தின் போது பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விவாதிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நீதிபதி பிரசாத் டெப் அறிவித்துள்ளார்.

தர்காநகர் கலவரத்தை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாரிய உயிர், சொத்துச் சேதம் ஏற்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனினும் கலவரத்தை தடுக்க பொலிஸார் கடும் முயற்சி எடுத்ததாக அரச சட்டத்தரணி வாதிட்டார்.

கலவரத்துடன் தொடர்புடைய 47 பேர் மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 300 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் குழு, மனுவை 2016ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

Post a Comment

0 Comments