அண்மையில் நான் மதமாறும் இலங்கை
முஸ்லிம்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எனது முகநூலில் எழுதினேன் .
அந்தக்கட்டுரை மிகவும் பரவலாக பேசப்பட்டது . அதேபோல் அதிகமான News page
களில் வெளிவந்தது . அது ஒருசிலர் மறுத்தார்கள் அதிகமானவர்கள் உண்மை என்று
ஏற்றுக் கொண்டார்கள் .
நான் இங்கு சொல்ல முனைவது அவர்கள்
மதமாறியதைப்பற்றி அல்ல அவர்கள் இஸ்லாத்தை விட்டும் பெளத்த மதத்திற்கு
மாறுவதற்கான காரணம் என்ன ? என்பதைப் பற்றி .
01) வறுமை .
இதுதான் முஸ்லிம்களின் மதமாற்றத்திற்கு
பிரதான காரணம் . இலங்கையில் இஸ்லாத்தை விட்டும் பெளத்ததிற்கு மதமாற்றம்
நடைபெற்ற கிராமங்களில் 98% வீதமானவை பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட
கிராமங்களில்தான் . எப்படியென்றால் அந்தக் கிராமங்களில் முஸ்லிம்கள் ஐதாக
வாழ்கிறார்கள் . அதேபோல் அந்த முஸ்லிம் குடும்பங்களுக்கிடையிலான தொடர்பும்
துண்டிடக்கப்பட்டுள்ளது .
அதேவேளை அவர்களுக்கு இஸ்லாம் முழுமையாக
கிடைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்க விலை . இவர்கள் முழுமையாக கணவன்
அல்லது பெற்றோர்களின் உதவியில்தான் தங்கியுள்ளார்கள் . இவ்வாறு இருக்க
இவர்களுக்கு உதவியாக இருந்த கணவன் அல்லது பெற்றோர்கள் மரணித்தபோது
அந்தப்பெண்களுக்கு ஆண்களின் உதவியும்,
பிள்ளைகளுக்கு குடும்பங்களின் உதவியும்
தேவைப்பட்டுள்ளது . இது கிடைக்காமையினாலேயே அவர்கள் மதமாற வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது .
02) முஸ்லிம் மாணவிகள் சிங்களப்பாடசாலைகளில் படிப்பதனால் .
இதுவும் இலங்கை முஸ்லிம்கள் பெளத்த மதத்திற்கு மதமாறுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது.
முஸ்லிம் பெண்கள் சிங்களப் பாடசாலைகளில்
படிக்கின்ற போது அவர்கள் சிங்கள மக்களின் கலாச்சாரத்திற்கு தன்னை அறியாமல்
கவரப்படுகின்றாள் . அதேபோல் அந்நிய ஆண்களை காதலித்து அவர்களுடன்
ஒடிப்போகும் அளவிற்கு அந்தப் பெண் மாறுகின்றாள். பெற்றோர்கள் அவளுடைய காதலை
எதிர்க்கும்போது அவளும் தனது பெற்றோருக்குத்தெரியாமல் அந்நிய ஆணுடன்
ஒடிப்போய் திருமணம் முடிக்கின்றாள் .பிறகு அவள் மதமாறுகின்றாள் . இது போன்ற
நிகழ்வு அதிகம் இடம்பெற்றுள்ளது .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.


0 Comments