எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள், சிறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன நாளைய தினம் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


0 Comments