தேசிய ஆள் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் ஒரு நாள் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த தொகை இன்று முதல் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை இதற்கான கட்டணமாக 500 ரூபா அறவிடப்பட்டு வந்ததாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் துணை ஆணையாளர் ரொஷான் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments