சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலி முகத்திடலில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்ளுர் சமுதாய யோகா மற்றும் ஆன்மீக அமைப்புக்களுடன் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் காலை 6.30 முதல் 8.30 வரை நடைபெற்றன.
ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானம் கடந்த 2014 டிசம்பர் 11ஆம் திகதி இந்தியாவால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கு இணை அநுசரணையாளரான இலங்கை உட்பட 170 நாடுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஜுன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்யும் படியான இந்த அழைப்பு இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியினால், கடந்த செப்டம்பர் 27ஆம் திகதியன்று அவருடைய ஐ.நா பொதுச் சபையில் நிகழ்த்தப்பட்ட உரையின்போது விடுக்கப்பட்டது.
"யோகா உள்ளத்தையும் உடலையும் ஒன்றிணைக்கும் ஒரு உருவாக்கம் ஆகும்: அது சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்குமான ஒன்றிணைந்தவொரு அணுகு முறையாகும். இது தேகாப்பியாசம் பற்றியதல்ல ஆனால் ஒருவரிடமுள்ள தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகும்" எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















0 Comments