Subscribe Us

header ads

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தர் கடமையேற்பு (PHOTOS)

பி. முஹாஜிரீன்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நான்காவது புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் நேற்று (24) புதன்கிழமை ஒலுவில் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற கடமையேற்பு வைபவத்தில் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், வரிவுரையாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1968ம் ஆண்டு பிறந்த உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் தனது உயர்கல்வியை பேராதனை பல்கலைக்கழககத்தில் கற்று தேறியதோடு தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50ற்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆய்விதழ்களில் 20ற்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள் தனது ஆய்வு கட்டுரைகளுக்கு ஜனாதிபதி விருதுகளும் பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயிலின் பதவிக்காலம் கடந்த 21ம் திகதி சனிக்கிழமை முடிவுற்றது. இதனையடுத்த எற்பட்ட வெற்றிடத்திற்கே பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உபவேந்தர் தெரிவுக்காக கடந்த மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்று முதலாமிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் நாஜிமின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிபாரிசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார்; தெரிவித்தார்.





Post a Comment

0 Comments