ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓருபோதும் நிறுத்தப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மன்றக்கல்லூhயிpல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இக்குழுவினர் அன்றிரவே முன்னாள் அமைச்சர் ஜோன் செனிவிரத்தினவின் வீட்டில் சந்தித்தனர்.ஆறு பேர் கொண்ட குறிப்பிட்ட குழுவினர் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆராய்துகொண்டிருந்தவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு சம்மதிக்க மாட்டார் என்ற செய்தி அவர்களிற்கு தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தானே இந்த விடயத்தை ராஜபக்சவின் குடும்ப நண்பர் ஓருவர் மூலமாக அவரிற்கு தெரியப்படுத்தியுள்ளார்,
இதேவேளை தன்னை போட்டியிடுவதற்கு அனுமதிக்காவிட்டால் தான் பாராளுமன்ற தேர்தலில் தனிக்குழுவொன்றை நிறுத்தப்போவதாக மகிந்த ராஜபக்ச அந்த நண்பர் ஊடாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றi நியமித்தமை ஜனாதிபதி தேர்தலில் அவரிற்கு ஆதரவு வழங்கியவர்களிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, சிறிசேனவின் குழு நியமனத்திற்கு பின்னர் அவரிற்கு ஆதரவு வழங்கிய சிலர் கொழும்பில் அவசரஅவசரமாக கூட்டமொன்றை நடத்தி மகிந்தவை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளை எதிர்ப்பது என தீர்மானித் துள்ளனர். எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மாட்டார்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு மஹிந்தவை இணைத்துக் கொள்ள எதிர்ப்பை வெளியிடாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் வேட்பாளராக மஹிந்த நிச்சயம் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் போது, மஹிந்தவிற்கு பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.
எனினும், அவ்வாறு மஹிந்தவிற்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் முற்றாகவே கிடையாது என அண்மைய அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அண்மையில் மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் நோக்கில் நிறுவப்பட்ட குழு பெயரளவு குழுவாகவே செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவையும் மைத்தரியையும் இணைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு, முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் இல்லத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கு உறுதியளித்தால் மட்டும் காத்திரமாக அடுத்த கட்ட முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என இந்தக் குழு ஏகமனதாக தீர்மானித்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கத் தவறினால் இந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கிவிடும் என குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


0 Comments