Subscribe Us

header ads

யாழ் பல்கலைக்கழகத்திற்கு செய்தியின் பலனாக பேரிச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளது

பாறுக் ஷிஹான்


யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு நோன்பு காலத்திற்கு பேரிச்சம்பழங்கள்  செய்தியின் பலனாக இன்று வழங்கப்பட்டுள்ளது.

முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஏ.சி முபீனின் அயராத முயற்சியின் பலனாக  முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அணுசரனையுடன் முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸிடம் கையளிக்கப்பட்டது.

இதனை யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம்  பொறுப்பேற்று அதன் தலைவர் ஜமால் முஹமட்,செயலாளர் எஸ்.கே.சுவர்ஹஹான் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதன் போது பேரிச்சம்பழங்களை பெற்றுக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

அத்துடன் தற்போது பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்வி கற்றுவரும் கூமார் 450 மாணவர்களிற்கு இப்பேரிச்சம்பழங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments