Subscribe Us

header ads

சீனாவில் மிக உயரமான பிரமாண்ட கட்டிடம் முறுக்கிய நிலையில் வடிவமைப்பு


சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காயில் உலகிலேயே மிகப் பெரிய 2–வது கட்டிடம் கட்டப்படுகிறது. இக்கட்டிடம் 2,086 அடி, அதாவது 632 மீட்டர் உயரம் உள்ளது. இக்கட்டிடம் முக்கோண வடிவில் அமைந்துள்ளது.

இக்கட்டிடம் 120 டிகிரி வளைவுகளுடன் முறுக்கிய நிலையில் கட்டப்பட்டுள்ளது. சீன மக்களின் முற்போக்கு தன்மையின் அடையாளமாக இந்த முறுக்கிய வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் எதிர் காலத்தில் சீனாவின் அடையாளமாக திகழும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் 110 மாடிகள் உள்ளன. இது ரூ. 15 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் 2–வது மிகப்பெரிய கட்டிடமாக திகழும். இங்கு உலகின் 2–வது மிகப்பெரிய  ஓட்டலும் அமைந்துள்ளது.

அது 84–வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் இதமான வெப்பத்துடன் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு ராட்சத தெர்மாஸ் பாட்டில் ஆக திகழும் என இதை வடிவமைத்த அமெரிக்க தலைமை கட்டிட நிபுணர் மார்ஷல் ஸ்ட்ராபெலா தெரிவித்துள்ளார். 

இக்கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments