Subscribe Us

பஜிரோவை ஆட்டோ முந்தியதால்? சாரதியின் பல் உடைந்தது!


தனது விலை உயர்ந்த பஜிரோ வாக­னத்தை சாதாரண முச்சக்கரவண்டியொன்று முந்திச் செல்வதா என ஆத்திரப்பட்ட ஆசாமியொருவர், முச்சக்கரவண்டி சாரதியை அடித்துஈ அவரது பல்லை உடைத்துள்ளார்.
இந்த விசித்திர சம்பவம் நேற்று கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் நடந்துள்ளது.
நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலையில் இடம்­பெற்ற மேற்­படி சம்­ப­வத்தில் காய­ம­டைந்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி கம்­பளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.
நேற்று தனது பஜிரோ வாக­னத்தில் சென்ற இந்த ஆசாமி, தொலை­பே­சியில் உரை­யா­டி­ய­படி மெது­வாக செலுத்திக் கொண்டு சென்­றுள்ளார். சனநாடமாட்டம் குறைந்த அந்த சமயத்தில், பின்னால் வந்த முச்சக்கரவண்டியொன்று அவரை கடந்து சென்றுள்ளது.
பஜிரோ ஆசாமிக்கு சுருக்கென கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. தனது விலையுயர்ந்த வாகனத்தை சாதாரண வாகனம் முந்திச் செல்வதா என கொதித்தவர், துரத்திச் சென்று முச்சக்கரவண்டியை வழிமறித்துள்ளார்.
தனது வாகனத்தை எப்படி நீ கடந்த செல்வாய் என கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இதில் முச்சக்கர வண்டி சாரதி பற்கள் உடைந்து படு­கா­ய­ம­டைந்த நிலையில் கம்­பளை வைத்­திய­ சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள இந்த விசித்திர ஆசாமியை பொலிசார் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments