Subscribe Us

header ads

ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற பறக்கும் பைக்கை தயாரிக்கும் அமெரிக்க ராணுவம்



பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் பறக்கும் பைக்கை நினைவிருக்கிறதா? அது போன்ற நிஜமான பறக்கும் பைக் ஒன்றை இங்கிலாந்து நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் வடிவமைத்து வருகிறது.


இந்த புதிய பைக்குக்கு பைக் ரேசர்களிடம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு இந்த பைக்கை முன்பதிவு செய்ய மட்டுமே முடியும். ஆனால் டெலிவரி செய்யப்படும் தேதியை திட்டவட்டமாக சொல்ல முடியாது. 



இங்கிலாந்தைச் சேர்ந்த மல்லாய் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ஆர்வமாக இதற்கான பணிகளை மெற்கொண்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு மல்லாய் நிறுவனத்தின் உரிமையாளரான கிறிஸ் மல்லாய்,  தொடக்க முயற்சியாக பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 1200cc பைக் என்ஜினை வைத்து இந்த பைக்கை வடிவமைத்தார். 



தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் அதி நவீன ஹோவர் பைக் குறித்து கிறிஸ் மல்லாய் கூறுகையில், "தற்போது ரேடியோ சிக்னல் மூலமாகத்தான் ஹோவர் பைக் செலுத்தப்படுகிறது. இன்னும் அதில் மனிதர்களை உட்கார வைத்து சோதனை செய்யவில்லை. ஹோவர் பைக்கின் பறக்கும் திறனை மேம்படுத்திய பிறகு மனிதர்களை வைத்து இந்த பைக்கை பறக்க வைப்போம்" என்றார்.

Post a Comment

0 Comments