Subscribe Us

header ads

’செல்ஃபி’ எடுத்தபோது நிகழ்ந்த விபரீதம்: மின்னல் தாக்கி நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள் (வீடியோ இணைப்பு)


மலேசியா நாட்டு கடற்கரை ஓரத்தில் செல்பி வீடியோ படம் எடுத்தபோது மின்னல் தாக்கியதில் நூலிழையில் வாலிபர்கள் 3 பேர் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் அண்மையில் வெளிநாட்டை சேந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரையில் உற்சாகமாக குளித்துவிட்டு கரையேறியுள்ளனர்.

கடற்கரை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, இடியுடன் கூடிய மழை பெய்தவாறு இருந்துள்ளது.

மூன்று நண்பர்களும் மழையில் நனைந்தவாறு உற்சாக சிரித்துக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.

நண்பர்களில் ஒருவர் தனது கமெராவை எடுத்து செல்பி வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது, ஒருவரும் எதிர்பாராத தருணத்தில் செல்பி எடுத்தவரின் முதுகிற்கு சில அடிகள் தொலைவில் மின்னல் ஒன்று பலத்த வெளிச்சம் மற்றும் ஓசையுடன் பூமியை தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கிய வேகத்தில் அங்கிருந்த செடி கொடிகள் பற்றி எரிந்ததுடன், 3 நபர்கள் மீது நெருப்பு புகையை வீசிய காட்சி அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது.

மின்னல் தாக்கிய காட்சி மற்றும் அதற்கு பயந்து 3 பேரும் அலறி அடித்து ஓடும் காட்சி என அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

கமெரா பிடித்திருந்த நபர் சில அடிகள் தாமதமாக நடந்திருந்தால், அவரை மின்னல் கொடூரமாக தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திருக்கும்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த அபூர்வ வீடியோ காட்சி ஆயிரக்கணக்கான நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

மின்னலுக்கு பொதுவாக யாரும் அதிக அளவில் பலியாவது இல்லை என கூறப்பட்டாலும், இதை நிச்சயமாக ஏற்க முடியாது என ஒரு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.

மின்னல் கண்டறிதலுக்கான சர்வதேச கருத்தரங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி சுமார் 24 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் மின்னல் தாக்குதலால் காயமடைகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments