உலகில் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த நாடுகளை கைவிட்டு அந்நிய தேசங்களை நோக்கி அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர், இன, மத ரீதியான மோதல்களால், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடுகளில் காணப்படும் போர் மற்றும் அரசியல் வன்முறை சூழல்களால், தமது உயிரை பாதுகாத்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பதுடன் அந்நிய தேசங்களை நோக்கியும் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
0 Comments