-The Puttalam Times-
‘புதிய வெளிச்சம்’ செய்திப் பத்திரிகையின் முதல் பிரதி (ஜூலை 01 – 14 (இதழ் 1 : மலர் 1) எதிர்வரும் ஜூன் 27 சனிக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை (fortnight) பிரசுரமாகும் ‘புதிய வெளிச்சம்’ செய்திப் பத்திரிகை ‘விழி’ வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடாகும்.
பொது மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘புதிய வெளிச்சம்’ செய்திப் பத்திரிகை வெளியிடப்படுகின்றது. சமூகத்தில் காணப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதும் நிறைவான அம்சங்களை தெரியப்படுத்தி ஆர்வமூட்டுவதும் இப் பத்திரிகையின் பிரதி நோக்கங்கள் ஆகும். மேலும், வாசகர்களின் சுய ஆற்றல்களுக்குத் தளமாகவும் ‘புதிய வெளிச்சம்’ அமையும் என பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸாலிஹ் அஸீம் The Puttalam Times–க்குத் தெரிவித்தார்.
அரசியல், செய்திகள், சிந்தனைக் கட்டுரைகள், கேள்வி பதில், போட்டிகள், இலக்கியம், கல்வி, பெண்கள் பகுதி, மருத்துவம், நகைச்சுவை, கேலிச் சித்திரம் என பல்வேறு பகுதிளை உள்ளடக்கி வெளிவரும் ‘புதிய வெளிச்சம்’ முஸ்லிம், தமிழ், சிங்கள மூவின மக்களுக்கும் நான்கு சமயத்தவருக்கும் சொந்தமான பத்திரிகையாக வெளிவரும் என்றும் கூறினார்.
பத்திரிகையின் விலை ரூ. 40/= ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு:
‘விழி’ வெளியீடு
இல. 8, ஒழுங்கை 10, நூர் மஸ்ஜித் வீதி, புத்தளம்
தொலைபேசி: 077 55 66 472
மின்னஞ்சல்: puthiyavelicham347@gmail.com



0 Comments