Subscribe Us

header ads

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பெண்



ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இரவு நேரம் பூங்காவில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென நிலைகுலைந்து விழுந்தார். கடும் வலியில் அலறிய அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய பாதசாரிகள் அவரை அடிலெய்டு ராயல் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இனி டைட்டாக ஜீன்ஸ் அனியக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர். கீழே விழுந்த அன்று டைட்டாக ஜீன்ஸ் அணிந்த அந்தப் பெண், தனது உறவினர் வீட்டில் குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்ததே அவரது திடீர் நிலைகுலைவுக்கும் தீராத வலிக்கும் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கெண்டைக்கால் சதையில் உள்ள இரண்டு நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்ததற்காக 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்தப் பெண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

Post a Comment

0 Comments