முல்லைத்தீவு நந்திக்கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த சட்ட விரோத மீன்பிடியாளர்களின் தலையீட்டிற்கு முடிவுகட்டும் விஷேட கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேற்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் , முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் பொறுப்பதிகாரி என பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தர்.
நந்திக்கடல் பரப்பில் சட்ட ரீதியாக தொழிலில் ஈடுபட்டு வரும் சில கிராமங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டு அவர்கள் எதிர் நோக்கிவரும் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கடற்றொழில் பொறுப்பதிகாரிகளோடு மீன்பிடி தொழிலாளர்களையும் உள்ளடக்கி சுமார் ஒன்றரை மணித்தியாளங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இவர்கள் எதிர் நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வை பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொடுத்தார்.






0 Comments