Subscribe Us

header ads

எங்கே செல்கிறது நம் சமுதாயம்! புனித இறை வணக்கத்தை கேவலப்படுத்தி உலக சாதனை..! (வீடியோ இணைப்பு)

புனித இறை வணக்கத்தை கேவலப்படுத்தி உலக சாதனை..!



சங்கை நிறைந்த கண்ணியமான மாதத்தில் விழித்து நின்று நீண்ட சூறாக்கள் ஓதி தொழ வேண்டிய தறாவீஹ் தொழுகையை கேவலமான ஒரு சாதனைக்காக 10 நிமிடங்களில் 23 ரக்காஅத்தை பாழ்படுத்திய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது..

وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۚ وَذَكِّرْ بِهِ أَن تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا ۗ أُولَٰئِكَ الَّذِينَ أُبْسِلُوا بِمَا كَسَبُوا ۖ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ
(நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டு விடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்.

(அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்க மாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.

(அல்குர்ஆன்: 6:70) 

Post a Comment

0 Comments