தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்,
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 200 கிராம்,
பால் – 1 கப்,
சர்க்கரை – அரை கப்,
ஆப்ப சோடா – முக்கால் டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது வனஸ்பதி – 2 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், பால், ஆப்ப சோடா, சர்க்கரை, வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் சிறு தீயில் வைக்கவும். அது பொங்கி வரும் போது, இறக்கி, ஆறவிட்டு, லேசாக கரண்டியால் மசித்து அத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், வெனிலா எசென்ஸ் சேர்க்கவும்.
இக்கலவையை வெண்ணெய் தடவிய அலுமினிய பாத்திரத்தில் கொட்டி, மேலே தண்ணீர் போகாமலிருக்க, அலுமினிய ஃபாயிலால் மூடி, இட்லி குக்கரில் சிறு தீயில் முக்கால் மணி நேரம் வேக விடவும். நன்கு வெந்தவுடன் வெளியே எடுத்து அலங்காரம் செய்தால் சுவையான பேரீச்சம்பழ புட்டிங் ரெடி.


0 Comments