Subscribe Us

header ads

நான் தான் ''மஹா தெனமுத்தா" (மகா பெரிய அறிஞன்)

-HAJA SAHABDEEN-


நான் தான் ''மஹா தெனமுத்தா" (மகா பெரிய அறிஞன்) இன்று ஞாயிற்றுக்கிழமை நான் வருவதாக கூறிய நாள். என்றாலும் எனது சீடர்களை காணவில்லை. 

அவர்கள் இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை. நான் அவர்களை வைத்துத்தான் பெரிய பண்டிதனாக ஊருக்கும் நாட்டுக்கும் காட்டி வருகிறேன். 

அவர்கள் வெறும் உதவாக்கரைகள். ஆனால் நான் அவர்களை சீடர்களாய் ஏற்றுள்ளது அவர்களுக்கு பெரிய விஷயம். 

எனது அந்த சீடர்கள்தான் போகிற இடமெல்லாம் என்னை புகழ்ந்து பேசி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். 

எனக்கு ஒன்றும் உருப்படியா செய்ய தெரியாது என்றது அவர்களுக்கு தெரியாது ஏனென்றால் அவர்கள் படு மொக்கர்கள். இப்படித்தான் எனது வாழ்க்கை ஓடுது. எனது சீடர்கள் விடாமுயற்சியாக செய்த பிரச்சாரம் இன்று நான் வாழும் கிராமமே என்னை விட்டால் ஆள் இல்லை என்ற நிலக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். 

இன்று நேரமிருந்தால் எனது சீடர்களை பற்றிய அறிமுகத்தோடு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். எப்படியோ அடுத்த வாரம்தான் எனது வீர பராக்கிரம கதைகள்.வரும். ஏனென்றால் கதையோடு படமும் அல்லவா கேற்கிறார்கள். படம் வரைய நேரம் வேண்டுமே. எனவே எனதுய் அன்பின் குழந்தைகளே பொறுத்திருங்கள்.

Post a Comment

0 Comments