அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும்
அரசியல் வரலாற்றில் இன்றைய 21ம் நூற்றாண்டின் 2ம் தசாப்த்தத்தின் ஆரம்பம்
மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வந்ததனை நாம் அனைவரும்
மறந்நிருக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறைகள்
நாளுக்கு நாள் மிகவும் தீவிரம் அடைந்து சென்று கொண்டிருந்த அந்த நாட்கள்
நமது அரசியல் மற்றும் சமயத் தலைமகளின் அதி தீவிர பலவீனத்தையே பறைசாற்றுவதாக
அமைந்திருந்தது. இந்த மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் எல்லாம் வல்ல
அல்லாஹ் ஒரு ஆட்ச்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் அரியதொரு வாய்ப்பினை நமக்கு
வழங்கியிருந்தான். அதன் பயனாக நாம் கடந்த சுமார் 5-6 மாத காலங்கள் ஓரளவு
நிம்மதியாக வாழ முடிந்தது.
அவ்வாறே சிறுபாண்மை அதிலும் குறிப்பாக
முஸ்லிம்களின் ஒட்டு மொத்த வாக்குகளால் வெற்றி பெற்ற தலைவர் மைத்திரி
அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களுடன் நன்றியுடன் நடந்து கொள்வார் என்றே இது
நாள் வரைக்கும் நம்பப்பட்டு வந்தது. என்றாலும் பொது பள சேனாவின்
அண்மைக்கால நடவடிக்கைகளும் மைத்திரி அவர்களின் மஹிந்தவிற்கு ஒப்பான மௌனமும்
அவர் மீதான நம்பிக்கையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
இதற்கிடையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு
பொதுத் தேர்தலின் ஊடாக முஸலீம்களின் பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு
செய்யும் வாய்ப்பினை நமக்கு வழங்கியுள்ளான்.
எனவே இவ்வாறான இந்த அசாதாரண சூழ்
நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச்
சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது சமூகத்தின் அனைத்துத்
தரப்பினர்களும்; இதை தமக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து
விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான
சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு
திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிக மிக
அவசியமாகும்.
ஏனெனில் நமது சமூகம் கமூக, சமய, அரசியல்
வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப்
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான்
பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை.
இந்த வரலாற்றுத் தொடரில் முன்னய
காலங்களில் நமது அரசியல் தலைமைகள் எப்படிப்பட்ட சவால்களையும் தனித்து
நின்று எதிர்கொள்ளக் கூடிய வகையில்; அன்றய சமூக ஒழுங்கமைப்பும் அரசியல் கள
நிலவரமும் ஓரளவேனும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இன்றைய சமூக
ஒழுங்கமைப்பும் அரசியல் கள நிலவரமும்; தலைமை, நிறுவாகம், சட்டம், ஒழுங்கு
போன்ற அனைத்துப் பகுதிகளிலும்; மிகவும் பாதகமான சூழ்நிலையையே
தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் நமது கடந்தகால அரசியல்
தலைமைகளை உதாரணம் காட்டி அவர்களால் சாதிக்க முடிந்ததை ஏன் இன்றய நமத
அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியாதுள்ளது என்று கேள்விக்கு மேல்
கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பது ஒரு ஆரோக்யமான அனுகுமுறையாக அமையாது.
ஏனெனில் இன்றைய இந்த சமூக மற்றும் அரசியல்
சூழ்நிலை நம் சமூகத்தின் ஆக அடிமட்ட உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட
உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டியதாகவே
உருவெடுத்துள்ளது என்பதுவே யதார்த்தமான கள நிலவரமாகும்.
எனவே பல தசாப்த்தங்களாக நம் சமூகம்
வேண்டி நிற்க்கும் மிக முக்கிய விடயமான இந்த சகோதரத்துவம், சமூக ஒற்றுமை,
மற்றும் தலைமைத்துவம் ஆகியவை வரலாற்றில் என்றும் இல்லாத அளவு இன்று மிகக்
கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. அனைத்துத்
தரப்பினர்களது ஆதங்கமும் ஏக்கமும் எந்த வகையிலேனும்; இவற்றை அடைந்தே தீர
வேண்டும் என்பதாகவே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இதன் பிறகும் அது
வெறும் பேச்சுப் பொருளாக இருப்பதனை அனுமதிக்க முடியாது, என்ன வில
கொடுத்தேனும் அதனை அடைந்தேத் தீர வேண்டும் என்பதுவே நம் அனைவரதும் ஒரே
இலக்காக இருக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும்
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள்
முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு முறண்பட்டுக கொண்டால்) கோழைகளாகி
விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக
இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(அல்-குர்ஆன்: 8: 46)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை
அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள்
எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;.
நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை
(அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103);
எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து
எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் “நம் சமூகத்தின் ஆக அடிமட்ட
உறுப்பினரிலிருந்து அதி உயர்மட்ட உறுப்பினர் வரை அனைவரும் ஒன்றிணைந்து நம்
சமூகத்தைப் பலமிக்க ஒரு சமூகமாக் கட்டியெழுப்பி நமது ஜனநாயக ரீதியிலான
போராட்டங்களை ஒரே அனியாக நின்று தொடராக முன்னெடுத்துச் செல்வதற்கான
ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கை
கோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால்
வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று,
அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோ, அவர்களைத்தான் அல்லாஹ் நிச்சயமாக
நேசிக்கின்றன். (அல்-குர்ஆன்: 61:4)
ஆகவே நம் சமூகத்தின் சகோதரத்துவத்தினை
மீழ்கட்டியெழுப்பி சமூக ஐக்கியத்தினை உறுதிப்படுத்தி அதன் அடித்தளத்தில்
நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பலமிக்கதொரு சக்தியாக மாற்றுவதற்க்கு
உங்கள் அனைவரதும் பங்களிப்புக்களும் பாரியளவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
எனவே நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத்
தேர்தலில் அனைத்து முஸ்லிம் அரசியல் மற்றும் சமய சமூகத் தலைமைகளும் பளைய
பகைமைகளையும் கட்ச்சி மற்று இயக்க வேறுபாடுகளையும் மறந்து நம்
சமூகத்திற்க்காகவும் சமயத்திற்க்காகவும் ஓரணியில் நின்று ஒரே தலைமையின்
கீழ் போட்டி இடுவதுவே சாலவும் பொருத்தமான நிலைப்பாடாக இருக்கும் எனக்
கருதுகின்றேன்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்


0 Comments