எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியுடன் முஸ்லிம் லிபரல் கட்சி கூட்டிணைந்து அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் தனது வேட்பாளர்களை இறக்கவுள்ளது ,கடந்த பல தேர்தல்களில் சுயட்சையாக தேர்தலை சந்தித்து தமது செல்வாக்கை பெருக்கிகொண்டதுடன் மட்டுமின்றி முஸ்லிம் லிபரல் கட்சி பலகாலமாக அம்பாறை மாவட்டத்தில் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளதுள்ளதுடன் சமூகத்தில் நல்ல செல்வாக்கும் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது .
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியினால் முன் வைக்கப் பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி கொள்கைளை தனது முஸ்லிம் லிபரல் கட்சி வரவேற்பதாகவும் மற்றக் கட்சிகள் பதவி மற்றும் அதிகரம்களை மட்டும் கைப்பற்றும் கொள்கைகள் கொண்ட கட்சிகளாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் இந்த தேசிய ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் சிறந்த எதிர்காலதிட்கு பாடுபட போவதாகவும்,எங்களது இணைவானது மக்கள் சேவைக்கான இணைவாக அமையும் என முஸ்லிம் லிபரல் கட்சி தலைவர் இஸ்மா லெப்பை அவர்கள் எமது செய்தித் தளத்திற்க்கு உறுதிப் படுத்தியுள்ளார்.
மதன் குமார்


0 Comments