கடல் உயிரினமான ஜெலி பிஷ் எனப்படும் இழுது மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மேற்கு, தென்மேற்கு மற்றும் தென் கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்று காலநிலை காரணமாக சமூத்திரத்தில் ஏற்படக் கூடிய சீதோஷண நிலை உயர்ந்துள்ளது.
இதனால் இழுது மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் முகாமையாளர் டர்னி பிரதீப் குமார எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
றுகுணு பல்கலைக்கழகத்தின் கடல்சார் விஞ்ஞான மற்றும் கடல்சார் புவியியல் கல்வி பிரிவின் பேராசிரியரான அவர், இழுது மீன்கள் மனிதவுடலில் ஸ்பர்சிக்கும் தருணத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மாற்று நடவடிக்கைகள் தொடர்பாக விபரித்துள்ளார்.
இழுது மீன்கள் நீரில் மிதக்கும் உயிரினம் என்பதுடன், அவற்றால் ஏனைய மீன்கள் போல நீந்துவதற்கு முடியாது.
இவற்றில் விஷமற்ற மற்றும் விஷமுடைய உயிரினங்கள் ஏனைய பெரிய மீனனங்களின் உணவாக பயன்படுகின்றன.
இழுது மீன்களின் மேற்பரப்பில் உள்ள பசை போன்ற பதார்த்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
கடற்பரப்பில் குறித்த மீன்களை ஸ்பரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தரைக்கு வந்து பசையை அகற்றி துடைக்காமல், வினாகிரி அல்லது சுடுநீர் போன்ற திரவங்களால் சுத்திகரிக்க முடியும்.
பின்னர் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


0 Comments