பீட்சா உற்பத்தியில் உலகின் தலைநகராக விளங்கும் இத்தாலி, மிக நீளமான பீட்சாவை உற்பத்தி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மிலனில் நடந்த உலக கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த பீட்சா உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு இந்த நீண்ட பீட்சாவை தயாரித்து அசத்தினர். 1.5 டன் மொஸ்சரெல்லா, 2 டன் தக்காளி சாஸ் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து 5 டன் எடையில் 1.59545 கி.மீ. (சுமார் ஒரு மைல்) நீளத்திற்கு இந்த பீட்சா செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று உலகின் நீண்ட பீட்சா இதுதான் என்று கின்னஸ் உலக சாதனை நீதிபதி லோரன்சோ வெட்ரி அறிவித்தார். ஐந்து ஓவன்கள் பயன்படுத்தி, இந்த பீட்சாவை உற்பத்தி செய்து முடிக்க 18 மணி நேரங்கள் ஆனது. ஒவ்வொரு மீட்டர் பீட்சாவை சமைத்து முடிக்க 3 நிமிடங்கள் பிடித்தது.
இதற்கு முன் 1.14 கி.மீ. நீள பீட்சாவை உற்பத்தி செய்து ஸ்பெயின் கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments