Subscribe Us

header ads

"புதிய வெளிச்சம்" என்னும் செய்திப் பத்திரகையின் வெளியீட்டு விழா

-Ibrahim Nihrir-


"புதிய வெளிச்சம்" என்னும் செய்திப் பத்திரகையின் வெளியீட்டு விழா இன்று மாலை அஸ்வர் மண்டபத்தில் ஆசிரியரும் எழுத்தாளருமான அல்ஹாஜ் லதீப் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது...

பழம் பெரும் பத்திரிகைகளுக்கு ஈடாக தரமான தாளில் அச்சிடப்பட்டு புத்தள அரசியல், நகைச்சுவை, ஆரோக்கியம், இலக்கியம் போன்ற பல் சுவை அம்சங்களோடு புதிய வெளிச்சம் சுடர் விட்டது...

முதன் முறையாக வெளியிடப்பட்ட இந்த பத்திரிகைக்காக சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சிரமப் பட்டிருப்பார்கள் என்பதை புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது...அந்த வகையில் புதிய வெளிச்சத்தின் பிரதம ஆசிரியரான Salih Azeemஅவர்களும் பத்திரிகை ஆசிரியையான Faathiimaa Silmiyaஅவர்களும் பாராட்டுக்குரியவர்கள்...
பத்திரகையின் இரு முத்தாய்ப்பான விஷயங்கள் ஆசிரியர் ஹாஜா சஹாப்தீனின் கார்டூனும், கவிஞர் K.a. Baiz இன் கவிதையுமாகும்...

புதிய வெளிச்சம் நம் முற்றத்து மல்லிகை...நிச்சயம் மணக்கும்...


Post a Comment

0 Comments