-Basheer Ali
பாடசாலைகள், பல்கலைக்கலழகங்களில் படிப்பிக்கப்படும் பாடப்புத்தகங்களால் மாத்திரம் ஒருவர் ஆளுமை உள்ளவராக மாற முடியாது. அப்படி "தியரி"யை மாத்திரிம் கற்று வெளியேறும் பட்டதாரிகைளை தனியார் கம்பனிகள் உள்ளீர்க்க்கத் தயங்குகின்றன. எனவே, பட்டதாரிகள் பல்வேறு துறைகளில் தமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தலைமைத்துவ வளிகாட்டி பயிற்றுவிப்பாளரும் தொழிலதிபருமான யூ.எம். பாஸில் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கான ஊக்குவிப்பு வழிகாட்டல் பயிற்சி நெறியில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருநூறு மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் Positive thinking "நேர் சிந்தனை" என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
எமக்குப் பின்னர் சுதந்திரமடைந்த மலேசியா இன்று பொருளாதாரத்தில் எம்மைவிட பல மடங்கு முன்னணியில் உள்ளது. நாம் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் மிகப் பின்னடைவிலேயே இருக்கிறோம். நாம் குறுகிய வட்டத்துக்குள் இருந்து சிந்திப்பதும் செயற்படுவதுமே இதற்குக் காரணமாகும்.
எமது குடும்பம்... எமது இனம் என்று வறையறுத்துக் கொண்டு செயற்படுவது, தேங்கி நிற்கும் குட்டைக்கு சமனானது. எம்மால் இந்த உலகமே பயன்பெற வேண்டும் என ஓடி ஓடி உழைக்கும் நதி போன்று நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.
பட்டதாரி மாணவர்கள் ஆளுமை விருத்தி மற்றும் தொழிற் திறன்களை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். அதன் மூலமே நவீன தொழிற் சந்தையில் கால்பதிக்க முடியும்.
-தலைமைத்துவ பயிற்சி வளவாளர் தொழிலதிபர் யூ.எம். பாஸில்





0 Comments