Subscribe Us

ஆட்டோ டிரைவர் டூ அசத்தல் பைலட்: சாதனை நாயகனின் சரித்திரப் பயணம்



வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் உத்வேகம் கொடுக்கும் கதை ஸ்ரீ காந்துடையது. 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் அப்பாவிற்கு மகனாய்ப் பிறந்தவர் ஸ்ரீ காந்த் பந்தாவனே. பள்ளிக்குச் செல்லும் போதே குடும்ப சூழ்நிலை காரணமாக டெலிவரி பாயாக ஆட்டோ ஓட்டும் வேலை பார்த்து வந்தார். அப்படி ஒருநாள் ஏர்போர்ட்டுக்கு டெலிவரி செய்வதற்காகச் சென்ற போது ஏர்போர்ட்டில் உள்ள டீ கடைக்காரர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே ஸ்ரீ காந்தின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து வியந்த அந்த டீக்கடைக்காரர்தான் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) பைலட் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் விவரத்தை தெரிவித்தார்.

அடுத்த நொடியே கற்பனையில் ஒரு ராட்சத விமானத்தை ஓட்டிச் சென்ற ஸ்ரீ காந்த் அப்படியே பறந்து போய் மத்திய பிரதேசத்தில் உள்ள விமான பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தார். பயிற்சியில் ஒவ்வொரு சோதனையையும் சாதனையாக மாற்றிய ஸ்ரீ காந்த், வணிக விமான உரிமத்தைப் (commercial pilot licence) பெற்றார். இருந்தாலும் விமானத்துறையில் உள்ள வேலை வாய்ப்பு குறைவு காரணமாக சில காலம் கார்ப்பரேட் எக்சிகியூட்டிவாக வேலை பார்த்தார். 

இப்போ, ஸ்ரீ காந்த் சார் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை பைலட், இவ்வளவு சோதனைகளைக் கடந்த ஸ்ரீ காந்த் கூடிய விரைவில் பைலட் ஆகும் லட்சியத்துடன் தன் சாதனைப் பயணத்தை தொடங்கியுள்ளார்.


Post a Comment

0 Comments