Subscribe Us

உங்கள் வீடுகளில் இவைகள் இருக்கின்றதா?



நமது வீடுகளில் எந்தெந்த ஆங்கில மருந்துகளையோ முன்னெச்செரிக்கையாக வாங்கிவைக்கிறோம். ஆனால், நபி மருத்துவத்தில் உள்ள மிக முக்கியமானவைகளில் சில நம்வீட்டில் இருக்கின்றதா? 

அவற்றை நாம் உட்கொள்கிறோமா? இல்லையெனில், இனிமேலாவது பயன்படுத்தி பாருங்களேன்….!

தேனில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. [அல் குர்’ஆன்]

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'கருஞ்சீரக விதையில் மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புஹாரி]

குறிப்பு: கருஞ்சீரகத்திற்கு உடம்பில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வயிற்றிலிருக்கும் கருவை அது பாதித்துவிடக்கூடும். ஆகவே, கர்ப்பிணிப்பெண்கள் கருஞ்சீரகம் உட்கொள்வதை தவிர்க்கவும்.

ஆனால், குழந்தை பிறந்த பிறகு கருஞ்சீரகம் உட்கொண்டால், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

இவற்றின் முக்கியமான சில பயன்பாடுகள்:

-கருஞ்சீரகத்தை நுனுக்கி, தேனில் கலந்து உண்டுவிட்டு வெந்நீர் அருந்தினால் கிட்னி மற்றும் சிறுநீர்ப்பையில் உள்ள கற்களை அகற்றிவிடும்.

-கருஞ்சீரகம், குறிப்பாக கருஞ்சீரக எண்ணெய் ஆஸ்துமாவை குணப்படுத்த உதவும்.

-கருஞ்சீரகம், இதயத்துடிப்பை சீராக்கி அதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

-நோய் எதிர்ப்புசக்தி குறைபாட்டால் ஏற்படும் கேன்சரை, தொடர்ச்சியாக கருஞ்சீரக எண்ணெய் உட்கொண்டால் தடுக்கமுடியும்.

--கருஞ்சீரகம் மாதவிலக்கு பிரச்சனைகளை சீராக்க உதவும்

Post a Comment

0 Comments