உலகக்கோப்பை போட்டியில் சச்சினை அவுட் ஆக்கியதற்காக இந்தியர்கள் இன்னும் என்னை மன்னிக்கவில்லை என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான சச்சினும் மிகச்சிறந்த பந்து வீச்சாளரான மெக்ராத்தும் மோதிக்கொண்டால் கேட்கவே வேண்டாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் அதிக ரன் குவித்திருந்தாலும் மெக்ராத்திற்கு எதிராக கொஞ்சம் திணறவே செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் இது பற்றி கிளென் மெக்ராத் கூறும் போது "2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் சச்சின் என்னுடைய பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் அதற்கு அடுத்த பந்திலேயே நான் அவருக்கு பவுன்சர் வீசி அவுட் ஆக்கிவிட்டேன். அதற்காக இந்தியர்கள் இன்னும் என்னை மன்னிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.


0 Comments