புதிதாக அமைக்கப்பட்ட காலிமுகத்திடல் சுற்றுவட்டம் சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த (17) இரவு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள சுற்றுவட்டம் அலங்கார நீர்த்தூவி முறைமையையும் மின்னொளி முறைமையையும் கொண்டுள்ளது. இச்சுற்றுவட்டம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி இலங்கையில் முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள் சில அமைந்துள்ளன. அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் தினசரி உலாவுகின்ற வலயமாக இது இருப்பது சிறப்பம்சமாகும்.
இதை நிர்மாணிக்கின்றபோது இலங்கையின் அடையாளத்தை எடுத்துக்காட்டுகின்ற சிங்க உருவங்களும் ஏனைய சிற்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
காலிமுகத்திடல் சுற்று வட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பிரதம அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ஏ.எச்.எம்.பௌசி, அகில விராஜ் காரியவசம், அர்ஜூன ரணதுங்க, கொழும்பு நகர பிதா ஏ.ஜே.எம்.முஸாமில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


0 Comments