Subscribe Us

லிட்டருக்கு 250 கி.மீட்டர் செல்லும் காரை தயாரிக்கிறது பி.எம்.டபிள்யூ ?


ஆடம்பரமான சொகுசு கார்களை தயாரிக்கும் முண்ணனி நிறுவனமான  பி.எம்.டபிள்யூ, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 250 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஓடும் பெரும்பாலான கார்கள் அதிகபட்ச சிக்கனமாக ஒரு லிட்டருக்கு 27.62 கி.மீட்டரே இயங்குகின்றன.  இந்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்  முயற்சியில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இறங்கியுள்ளதாக தக்வல்கள் வெளியாகியுள்ளது. அதாவது 400 மில்லி பெட்ரோலுக்கு 100 கி.மீ. மைலேஜ் தரும் காரை உருவாக்கும் முயற்சியில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வதந்திகள் உலா வருகின்றன.

பிம்மர் என்றழைக்கப்படும் இந்த கார் 4 சீட்களை கொண்டிருப்பதுடன், கார்பன் பைபரால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பை கொண்டதாக இருக்கும். இதன் எடையும் கூட 1200 கிலோவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த காரின் என்ஜின் எதைக் கொண்டு இயங்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. எனினும் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments