-எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம், கல்லடி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தநபர், இன்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியில் சென்ற போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் டபிள்யு. சூரியசேன எனும் 40 வயதுடைய குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments