Subscribe Us

header ads

மஹிந்த இல்லாமல் மைத்திரி மட்டும் என்றால் ஆதரிக்க முஸ்லிம்கள் தயார்

M.JAWFER J.P –


தற்போது நமது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது இன்றைய நிலையில் முஸ்லிம்களாகிய நாம் இலங்கை தேர்தல் வரலாற்றில் சந்தித்திரியாத ஒரு புதுமையான தேர்தலை சந்திக்கின்றோம்.

நாம் ஆதரவு கொடுத்து வெற்றிபெற வைத்த மைத்திரி அவரையும் மறக்க முடியவில்லை அவேருக்கும் நம்மை கைவிடவும் முடியவில்லை. 

இவ்வாறான ஒரு இக்கட்டான நினையில் மகிந்த ராஜபக்ஷ கூட்டத்தின் நுழைவு எம்மை,தினரவைக்கின்றது. இன்றைய மைத்திரியின் நிலை கட்சியும் வேண்டும், பதவியும் வேண்டும், உயிரோடு வாழவும் வேண்டும்.கட்சியை பாதுகாத்து வெற்றியும் பெறவேண்டும் என்றால் மகிந்த கூட்டத்தை சேர்த்தாக வேண்டும். ஆனால் அவ்வாறு மஹிந்த உள்நுழைந்தால் பெராபத்தொன்று வரும் என்ற அச்சம் உள்ளது. இது இவ்வாறு இருக்க நம் நிலை என்னவென்றால், மஹிந்த இல்லாமல் மைத்திரி மட்டும் என்றால் ஆதரிக்க முஸ்லிம்கள் தயார்.


மஹிந்தயோடு சேர்ந்து வரும் வாய்ப்பு ஏற்பட்டால் முஸ்லிம்கள் அவ்விடத்தை விட்டு நகர்வதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். ஏன்என்றால் இன்னுமொரூ தர்காடவுனை பார்க்க முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. இதனடிப்படையில் 
பார்க்கும் போது மைத்திரி மஹிந்த இந்த இரண்டு குழுக்களையும் விட்டால்,
நாம் எங்கு போய் சேர்ந்து கொள்வது என்ற பிரச்சினை ஏற்றப்பட்டு முஸ்லிம்களின் வாக்குகள் பலவாறு சிதறும் வாய்ப்பு அதிகமுள்ளது.

இவ்விடத்தில்தான் நம் முஸ்லிம்கள் நன்கு சிந்திக்க வேண்டும் .பாமர மக்களை விட நம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இச்சந்தர்ப்பத்திலாவது சமுதாயத்துக்காக ஒன்றுபடவேண்டும்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிரிந்து இருக்கும் இவ்வேளையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. நன்கு சிந்திக்க வேண்டும்.தேர்தல் முடிந்தவுடன் எந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறினாலும், 20 தாவது திருத்த சட்டம் கட்டாயம் கொண்டுவருவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ஆட்சிக்கு வர இருக்கும் எதோ ஒரு கட்சிக்கு நாம் இப்போது அதாவது நடைபரக்கூடிய தேர்தலில் வாக்களிப்பதைப்போருத்துதான் 20ல் நம்முடைய கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படும்.


ஆகவே முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்ச்சியை ஆதரிப்பதுதான் நம்முடைய எதிர்காலத்துக்கு நல்லது. 20 தாவது திருத்தச்சட்டத்தை நிர்ணயிக்கும் தேர்தல்தான் இது என்பது மட்டும் உண்மை. ஆகவே தயவு செய்து எதிர்கால சந்ததிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கவனத்தில் கொண்டு இப்போது இருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவேர்கள் ஒன்றுபட வேண்டும் என்று தாழ்மையாக கேட்கிறேன். வஸ்ஸலாம்

Post a Comment

0 Comments