Subscribe Us

header ads

மரணத்திற்கு முன் சிறு வயதிலிருந்து காதலித்த பெண்ணை மணக்க விரும்பிய காதலன்: துணிந்து கரம்பிடித்த காதலி...



மரணத்தை தழுவுவதற்கு முன் தன்னை மணம் செய்துகொள்ள விரும்பிய காதலனின் விருப்பத்தை இளம்பெண் ஒருவர் துணிந்து நிறைவேற்றியுள்ளார்.

பிரிட்டன் நாட்டின் பர்மிங்காமில் நகரில் வசித்து வரும் 16 வயதான உமர் அல் ஷெய்க், சிறுவயது முதல் ஏமி க்ரெஸ்வெல் என்ற பெண்ணை மனதுக்குள் காதலியாக பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லுகேமியா நோயால் உமர் பாதிக்கப்பட்டார். இதற்காக குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது உமருக்கு நோய் முற்றியுள்ளதும், அவரது மரணத்துக்கான நாள் நெருங்கி வருவதும் தெரியவந்தது.

மரணத்திற்கு முன் தனது காதலை ஏமியிடம் தெரிவிக்க விரும்பிய உமர், சிறுவயது முதல் மனதுக்குள் பூட்டி வைத்த காதலி நீ தான் என்று அவளிடம் கூறினார். மரணத்துக்கு முன் உன்னை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் உமர் தெரிவித்தார். உமரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய துணிந்த 16 வயது ஏமி, தனது பெற்றோரின் சம்மதத்தை கேட்க அவர்களும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். மறுபுறம் உமரின் பெற்றோரும் அவரது விருப்பத்திற்கு இணங்கினர்.

இதையடுத்து ஜூன் 19-ந் தேதி மருத்துவமனையிலேயே திருமண வைபவம் அரங்கேறியது. இளஞ்சிவப்பு நிறத்தில் உடையணிந்து தேவதையாக வந்த ஏமியின் மோதிர விரலில், மலர் பொறித்த மோதிரத்தை அணிவித்த உமர், ஏமியுடனான தனது திருமணத்தை அகில உலகமே பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார். திருமணத்துக்கு பின் காதல் தம்பதிகள் இனிமையான வார்த்தை பரிமாற்றங்களையும், வாழ்க்கையின் கடந்த கால நினைவுகளையும் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில் கடந்த 22-ந் தேதி புன்னகையான முகத்துடன் மரணத்தை தழுவினார் உமர்.

ஏமியோ உமரின் நினைவுகளுடன் கண்ணீரை சிந்தினாள்...ஏமியின் துணிச்சலான செயலை பாராட்டும் வகையில் நாமும் கண்ணீர் சிந்தலாமே...



Post a Comment

0 Comments