தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்
மனோகணேசன், பிரதித் தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு பிற்பகல் 2 மணி முதல்
3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பாக
கூட்டணித் தலைவர் மனோ கணேசன் கூறியதாவது;
எமது சந்திப்பின் போது பல்வேறு
விடயங்களை நாம் கலந்துரையாடினோம். ஜனாதிபதி எம்மிடம் கூறிய விடயங்களில்
சில முக்கிய விடயங்களை தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி எம்மிடம் கூறுகையில்; பிரதமர் 24 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என கூறியிருக்கலாம்.
இந்த பாராளுமன்றம் இனியும் தொடர முடியாது. இது கலைக்கப்பட வேண்டும். அதற்கான முடிவை நான் எடுத்து விட்டேன்.
திட்டவட்டமான திகதியை நான் இன்னமும்
தீர்மானிக்கவில்லை. இன்னமும் சில தினங்களில் திகதி தீர்மானிக்கப்படும்
எனினும் எவரும் எதிர்பாராத வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பதை
உங்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments