1.முதலில் குர்ஆனை அன்றாடம் ஓதவேண்டும்
என்னும் எண் ணத்தை மனதில் விதைக்க வேண்டும். அவ்வெண்ணத்தை வளர்க்க
வேண்டும். முடிந் தளவு தினந்தோறும் ஓதத் தொடங்க வேண்டும்.
2.தினந்தோறும் அதிகபட்சம் அரை ஜுஸ்வு
(60ல் ஒரு பாகம்) ஓத வேண்டும். அது இயலவில்லை என்றால் குறைந்தபட்சம் ஒரு
தாள் (இரண்டு பக்கம்) ஓத வேண்டும்.
.
3.நம்முடைய வாழ்க்கைக்கான நெறிமுறை,
அன்றாட வாழ்க் கைக்கான வழிகாட்டுதல், சத்தியத்தை விளக்கும் கையேடு என் னும்
எண்ணத்தோடு ஓத வேண்டும்.
4.குர்ஆனைப் பற்றிய நன் னம்பிக்கையை முதலில் உள்ளத்தில் ஆழமாகப் பதியவைக்க வேண்டும். அந்த நல்லுணர்வோடு ஓதத் தொடங்க வேண்டும்.
5.வாசிப்பது, புரிந்து கொள்வது,
விளங்கிக் கொள்வது, மனதில் பதிய வைப்பது, நடைமுறை வாழ்வில் செயல்படுத்த
முயற் சிப்பது, நம்மைச் சுற்றி யுள்ளவர்களுக்கு எடுத்துக் கூறுவது, நம்
முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் குர்ஆனின் நடமா டும் சின்னமாக ஆக்குவது,
குர்ஆனிய வாழ்க்கையை வாழு மாறு ஒட்டுமொத்த உலகிற்கும் அழைப்பு விடுப்பது —
இவை யனைத்தும் குர்ஆனோடு நாம் கொண்டாக வேண்டிய தொடர்பின் சிறுசிறு
அம்சங்களாக விளங்குகின்றன.
6.இந்த நோக்கத்தை அடைவதற்கு முதல் காலடியை இந்த ரமழான் மாதத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
7.நம்மில் பலபேருக்கு குர்ஆனைப் பார்த்து
ஓதக்கூட தெரிவ தில்லை. எவ்வளவு பெரிய இழப்பு இது என்பதை அவர்கள்
உணருகிறார்கள். ஆயினும் அதை நிவர்த்தி செய்யும் முயற்சி களில் போதுமான அளவு
இறங்குவதில்லை.
8.வரப்போகும் ரமழானைப் பயன்படுத்தி இந்த
அவல நிலையை கட்டாயம் போக்கிக் கொள்வேன் என ஒவ்வொருவரும் சபதம் மேற் கொள்ள
வேண்டும். இத ஒன்றும் பெரிய மலையைப் புரட்டிப் போடுகின்ற காரியம் அல்ல.
கொஞ்சம் முயற்சி செய்தால் நாமும் குர்ஆனை ஓதக் கூடிய மக்களாய் மாறிவிடலாம்.
.9அதேபோல, ஓதத்தெரிந்த பலபேர் தொடர்ந்து
ஓதுவதில் அக் கறையே செலுத்துவதில்லை. சர்வசாதாரணமாக அலட்சியப்
படுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். நாம் அலட்சியப் படுத்தும் ஐந்து நிமிட
நேரம் நாளை மஹ்ஷர் பெருவெளியில் எவ்வளவு மதிப்பு மிக்க நிமிடங்களாக மாறி
நம்மைக் காப் பாற்றப் போகின்றது என்பதை உண்மையிலேயே நாம் உணர்ந்தால்
எவ்வளவு வேலை இருந்தாலும் சிரத்தையோடு அந்த “ஐந்து நிமிடங்களை ஒதுக்கி
குர்ஆனை தினந்தோறும் கட்டாயம் ஓதுவோம்”.
-அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் உமரி,இந்தியா .


0 Comments