Subscribe Us

தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்ளும் பொதுபலசேனா


பொதுபல சேனா இயக்கம் புலம்பெயர் சமூகத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் சமூகத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுவார்த்தை நடத்துவதனை வரவேற்பதாக பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் சாதாரண தமிழ் மக்களை மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் மட்டுமன்றி ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments