-Athambawa Waaqir Husaain-
அன்று ஆங்கிலேயே ஆட்சியாளர்களினால் கட்டமைக்கப்பட்ட இலங்கை ரயில்வே திட்டத்திற்கான வரைபடம் இது. இந்த திட்டத்தில், கிழக்கு மாகான கரையோர உத்தேச ரயில்வே எல்லையானது நிந்தவூர் வரை வரையறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்று கிட்டத்தட்ட எழுபது வருடம் ஆனபோதும், இலங்கை ரயில்வேயில் எந்தவித நவீன அபிவிருத்தியும், புதிய பாதை விஸ்தரிப்பும் மேட்கொள்ளப்படாமல் இருப்பது, எம்மை ஆளும் வர்கத்தின் அல்லது தலைவர்களின் இயலாமையை வெளிக்காட்டி நிற்கின்றது.
இந்த உத்தேச திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது போலல்லாமல், ஆகக்குறைந்தது தென்கிழக்கின் தலைநகராம் கல்முனை வரையாவது இந்த ரயில்வே பாதையை விஸ்தரிக்க எமது அரசியல் தலைமைகள் திட்டம் ஒன்றை முன்னெடுக்குமா?
வெறும் தையல் இயந்திரம், பாலர் பாடசாலை வைபவம், விளையாட்டு நிகழ்சிகள் போன்ற பாரிய சமூக அபிவிருத்தியில் திளைத்திருக்கும் எம் அரசியல் தலைமைகளுக்கு இது ஒரு சின்ன விடையமல்லவா....


0 Comments