Subscribe Us

மலேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மைதானத்தில் சுருண்டு விழுந்து நைஜீரிய வீரர் மரணம்



மலேசிய கால்பந்து மைதானத்தில் வீரர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இங்குள்ள கோட்ட பாரு என்ற என்ற இடத்தில் மலேசியன் பிரீமியர் லீக் டி-டீம் மற்றும் கேலண்டன் அணிகளுக்கு இடையே நட்புரீதியிலான போட்டி நடைபெற்றது. ஆட்டம், தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே டி-டீமுக்காக விளையாடிய நைஜீரிய தடுப்பாட்ட வீரர் டேவிட் ஒனியா (வயது 30) திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த செய்தி அறிந்து 60-வது நிமிடத்தில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments