ஜனநாயக தேசிய இயக்கத்தின் தேசிய மாநாடு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக
மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் தலைவராக அமைச்சர் ராஜித சேனாரத்னவின்
மகன் சத்துர சேனாரத்ன செயற்பட்டுள்ளார்.
மாநாட்டின் போது கருத்து வெளியிட்ட சத்துர சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
நீங்கள் 1977ஆம் பெலியத்தை தொகுதி ஊடாக தேர்தலில் களமிறங்கியிருந்தால் மீண்டும், பெலியத்தை தொகுதி ஊடாக தேர்தலில் களமிறங்க வேண்டும்.
நான் பெலியத்தை தொகுதி ஊடாக தேர்தலில் களமிறங்குவேன். முடியும் என்றால்
பெலியத்தை தொகுதி ஊடாக தேர்தலில் போட்டியிட்டு உங்களுடைய அரசியல்
வாழ்க்கையை முடித்துக்கொள்ளுங்கள் என அவர் முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்
விடுத்துள்ளார்.
ஒருவருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வரையில் வழங்கி, இரண்டு லட்சம் வரையில்
பஸ்களுக்கு செலுத்தி மாத்தறைக்கு மக்களை அழைத்து வருகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சவின் ஊரான மெதமுல்லை பிரதேசத்தின் முன் இரண்டு பஸ்களில்
மக்கனை நிரப்பிக்கொள்வதற்கு 03 மணித்தியாளங்களும் 41 நிமிடமும் ராஜபக்ச
தரப்பினர் வீணடித்தார்கள். எங்களிடம் அதற்கான காணொளிகளும் உள்ளன.
மோசடிகாரர்களுக்கு வேட்பு மனு பட்டியல் வழங்க மாட்டோம் என நல்லாட்சியில் வாக்குறுதி வழங்கியிருந்தார்கள்.
அதனை மீறி வழங்கினால் சிறிகொத்தா தலைமையகத்தை நாங்கள் சுற்றிவளைப்போம் என
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சத்துர சேனாரத்ன மேலும்
குறிப்பிட்டுள்ளார்.


0 Comments