பெரும்பாலும் நாளை இரவு நாடாளுமன்றம் கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக செப்டம்பர் மாதத்திற்குள்
புதிய நாடாளுமன்றத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டு வருகின்றார்.
அதற்கமைய நாளைய தினம் இரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வாய்ப்புகள்
அதிகமாக காணப்படுகின்றது.
இதற்கிடையில் புதிய தேர்தல் முறை
உள்ளடக்கப்பட்டுள்ள 20ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று
மற்றும் நாளைய தினங்களில் நாடாளுமன்றில் விவாதங்கள் இடம்பெறவுள்ளது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்
பிரேரணையை தூரப்போடுமாறு ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு
வருவதற்கு முன்னர் 20ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனது ஒரே விருப்பம் கூட்டணி அரசாங்கம்
ஒன்றை எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் உருவாக்கி அனைவரும் ஒன்றிணைந்து
செயற்படுவதே என ஜனாதிபதி அமைச்சர்களுக்கு குறிப்பிட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments