Subscribe Us

header ads

மகிந்த ராஜபக்சவின் நல்ல விடயங்களை நாம் மறந்து விட முடியாது – சம்பிக்க


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நல்ல மற்றும் கெட்ட விடயங்கள் இருந்தன, கெட்ட விடயங்களுக்காக அவரது நல்ல விடயங்களை மறந்து விட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைவர்கள் இருவரை இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதில் தவறில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து பிரச்சினையில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றாரா இல்லையா என்பதுதான் மிகவும் முக்கியமானது.

சந்திரிக்காவையும் மஹிந்தவையும் இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தின் அர்த்தம் புரியவில்லை.

முன்னாள் தலைவர்கள் இணைகின்றார்களா இல்லையா என்பதனை விடவும் மூன்றாவது தலைவரின் கீழ் கட்சி புனர்நிர்மானம் செய்யப்பட்டு மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் நோக்கமாகும்.


20 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்த கட்சி என்ற ரீதியில் இந்த மாற்றம் அவசியமானது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments