கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்வதற்கு ஆதரவு வழங்கியவர்கள், அக்கூட்டணியை விட்டு வெளியேறும் அறிகுறி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் மூலம் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்தில் நியமிப்பதற்கான முயற்சியிருப்பின் அதற்கு இணக்கம் தெரிவிப்பதில்லை என சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அப்படி ஏதேனும் நடந்தால் தாங்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடுவதற்கு வேட்புரிமை வழங்கப்படுமாயின் நான் தொடர்ந்தும் கட்சியில் நீடிப்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ள நேரிடும் என துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.


0 Comments