Subscribe Us

header ads

இனி படிக்கும் ஒவ்வொரு பக்கத்துக்கும் காசு: அமேசான் அதிரடி



இனி வாடிக்கையாளர்களிடம் படிக்கும் பக்கத்திற்கு எற்ப பணம் வசூலிக்க இருப்பதாக அமேசான் அதிரடியாக தெரிவித்துள்ளது.

கிண்டில் போன்று படிப்பதற்கென்றே பிரத்தியேகமான தொழில்நுட்பக் கருவிகளை வைத்திருப்பவர்கள் முதல், சாதாரண ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் வரை, e-book எனப்படும் இ-புத்தகங்களை படிப்பதற்கு பிரபல இணையதளமான அமேசானையே அணுகுவர். 

இந்த அமேசான் எப்படி புத்தகங்களை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது? 

உதாரணமாக கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை பொன்னியின் செல்வன் இ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்வதற்காகக் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளரிடமிருந்து பெறும் இந்த தொகையில் இருந்துதான் அமேசான் நிறுவனம் புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு (அல்லது அந்த புத்தகத்தின் காப்புரிமை பெற்றவர்களுக்கு) பணம் கொடுக்கிறது.

இந்நிலையில் பல வாடிக்கையாளர்கள் புத்தகத்தை முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிப்பதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அமேசான், சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு மட்டும் படிக்கும் பக்கத்திற்கு ஏற்ப பணம் கொடுத்தால் போதுமானது என்று அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments