Subscribe Us

header ads

பொதுத் தேர்தலில் பலமான கட்சியாக ஐ.தே.க. களமிறங்கும்


பாரா­ளு­மன்ற தேர்­தலில் பல­மான கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்சி கள­மி­றங்கும். பெரும்­பான்மை வாக்­கு­க­ளுடன் மாபெரும் வெற்­றியை பெற்றே தீரும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் உப தலை­வரும் நிதி அமைச்­ச­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.
இந்த தேர்­தலில் மக்கள் ஆணை எந்த தரப்­பினர் பக்கம் உள்­ள­தென்­பது தெரி­ய­வரும். நீதி­யான தேர்­தலை நடத்தி வெற்­றியை உறுதி செய்வோம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்றம் வெள்ளிக்கிழமை நள்­ளி­ரவு கலைக்­கப்­பட்­டது. இதன்­படி தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி தயார் நிலை தொடர்பில் வின­விய போதே முன்னாள் நிதி அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
ஜன­வரி 8 ஆம் திகதி சர்­வா­தி­கார போக்­குடன் கூடிய ராஜ­பக் ஷ குடும்ப ஆட்­சிக்கு எதி­ராக ஜன­நா­யக புரட்­சியை முன்­னெ­டுத்து மாபெரும் வெற்­றியை பெற்­றுக்­கொண்டோம். எனவே எமது முதல் கட்ட புரட்­சியை வெற்றி கொண்டோம்.
இந்­நி­லையில் இரண்டாம் கட்ட புரட்­சிக்கு நாம் தற்­போது தயா­ராக உள்ளோம். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட வர்த்­த­மானி அறிக்­கையின் மூல­மாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்­து­விட்டார்.
எனவே ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. தேர்­த­லுக்கு ஐக்­கிய தேசியக் கட்சி முழு­மை­யாக தயா­ராக உள்­ளது. எனவே பல­மான கட்­சி­யாக நாம் தேர்­தலில் கள­மி­றங்கி மாபெரும் வெற்­றியை பெற்று ஆட்­சிப்­பீ­ட­மே­றுவோம்.
நாட்டில் இது­வரை காலம் எந்­த­வொரு அர­சாங்­கமும் செய்­யா­த­வை­களை 100 நாள்­களில் சிறு­பான்மை அர­சாங்­க­மாக நிறை­வேற்­றி­யுள்ளோம். எவ­ராலும் மாற்ற முடி­யா­தென்று கூறிய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை திருத்­தி­ய­மைத்தோம்.
அது­போன்று பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­துடன், அத்­தி­ய­ாவ­சிய பொருட்­களின் விலை­க­ளையும் குறைத்து மக்­க­ளுக்கு சலுகை வழங்­கினோம். எனவே தற்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு, பெரும்­பான்மை அர­சாங்­க­மாக எமக்கு மக்கள் ஆணை வழங்­கினால் பொரு­ளா­தார ரீதி­யாக நாட்டை கட்டியெழுப்புவோம்.
எனவே இந்த தேர்தலில் மக்கள் ஆணை எந்த தரப்பினர் பக்கம் உள்ளதென்பது தெரியவரும். எவ்வாறாயினும் நீதியான தேர்தலை நடத்திக் காட்டி எமது வெற்றியை உறுதி செய்வோம் என்றார்.

Post a Comment

0 Comments