அமெரிக்காவில் உள்ள பண்ணை ஒன்றில் கோழிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை துன்புறுத்தியதாக 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஸ்டர் பண்ணைகள் எல்.எல்.சி. என்பது அமெரிக்காவில் உள்ள முக்கிய கோழி பண்ணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கலிபோர்னியா மற்றும் ப்ரெஸ்நோ பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகளில் உள்ள கோழிகள் மற்றும் கோழி குஞ்சுகளை ஊழியர்கள் துன்புறுத்துவதை ரகசிய கேமிரா மூலம் விலங்குகள் நல அமைப்பு ஒன்று படம்பிடித்தது. மேலும் கோழிகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் இறக்கைகளை உறிப்பதும் அதில் தெரியவந்தது. இதனை அடுத்து குறிப்பிட்ட பண்ணைகளில் போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 5 ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பாஸ்டர் பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல் இந்தியாவில் கோழிகளை துன்புறுத்துவதற்காக ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்ய ஆரம்பித்தால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள்.


0 Comments