Subscribe Us

மஹிந்தவின் படத்துடன் கூடிய 4 பாரிய காட்சிப் பலகைகளுக்கு தீவைப்பு


நவகத்தேகம பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடன் கூடிய நான்கு பாரிய காட்சிப் பலகைகள் உடைக்கப்பட்டு அவற்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். 

நவகத்தேகம பிரதேச சபைக்கு கடந்த அரசாங்கத்தினால் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நிர்மாணிக்கபடவுள்ள கேட்போர் கூடம்,  சந்தைக் கட்டிடத் தொகுதி மற்றும் தெதுறு ஓயா வேலைத்திட்டங்கள் தொடர்பிலான விபரங்கள் அடங்கிய காட்சி பலகைகள் நவகத்தேகம பிரதேச சபையினால் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அவையே இவ்வாறு உடைத்து தீயிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த காட்சிப் பலகைகளை உடைத்து சேதப்படுத்துவதற்காக சிலர் வந்ததாகவும், அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், அன்றைய தினம் பிரதேச சபையில் இரவு காவலாளியாகப் பணியாற்றியவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 
இச்சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிசிர குமாரவினால் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments